
மகர ஜோதி பற்றி பிரபல பத்திரிக்கைகள் என்ன கூறுகின்றனர்?

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தோன்றும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று கூறி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வழிபடுவது வழக்கம். இது தெய்வச் செயலால் தோன்றும் ஜோதி என்றே இது வரை கதைக்கப்பட்டு வந்தது.இந்த ஜோதி தோன்றும் ஒரு சில நிமிட நேரத்திற்கு கூடியிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்கள் பக்தி வெறியுடன் சாமியே சரணம் அய்யப்பா என்று ஒன்று போலக் குலவையிடுவர். சிறிது நேரத்தில் ஜோதி மறைந்ததும் அமைதி திரும்பி விடும்.
இந்த மகரஜோதி நிகழ்ச்சியினால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நல்ல வருமானம். கடந்த பத்து ஆண்டுகளில் போர்டின் வருமான உயர்வுக்கு இந்த மகரஜோதியும் ஒரு காரணம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சபரி மலை வருகின்றனர்.இந்த மகரஜோதி மனிதர்களால் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத் திற்கு ஏற்றப்படுகிறது; இது தெய்வ அருளால் தோன்றுவதல்ல; இது மக்களை ஏமாற்றும் ஒரு வேலையே என்று பகுத்தறிவாளர்கள் கூறிவந்தது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
இந்த மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவது அல்ல; செயற்கையாக மனிதர்களால் ஏற்றப்படுவதே என்று அண்மையில் தேவசம் போர்டும், கேரள சமய அறநிலையத் துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டனர். என்றாலும் இந்த மகரஜோதி நிகழ்ச்சியை நிறுத்த அவர்கள் தயாராக இல்லை. பொய்ம் மையையே வைத்து வியாபாரம் செய்து வரும் மத வியாபாரிகள் அவ்வளவு எளிதாக தங்கள் வியாபாரத்தைக் கை விடுவார்களா
(ஆதாரம்: The Illustrated Weekly of India, 15 (1987)
ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டி
சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தெகல்கா இதழ் வெளிப் படுத்தும் உண்மைகள்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறை யும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர். கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.
பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத் தினர் பகுத்தறிவாளர்கள்.
இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ் வரரு, ஆமாம், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமாம் என்று ஆமோதித்துவிட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ன கூறுகிறது?
இதுநாள்வரை தெய்வீக அற்புதம் என்று கருதி வரப்பட்ட, புகழ் பெற்ற, சபரிமலை மகர விளக்கு, மனிதரால் ஏற்றப்படுவதுதான் என்று இறுதியாக சான்றளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக் கான மக்களை பரவசப்படுத்தி வந்த, ஆண்டுதோறும் மகர மாத முதல் நாள் அன்று மூன்று முறை ஒளிவிடும் ஒளிப் பிழம்பிற்குப் பின்னால் தெய்வீகத் தன்மை கொண்டது எதுவுமில்லை என்று கோயில் பரம்பரை பூசாரி கண்டரரு மகேஸ்வரரு மற்றும் கோயில் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜி.சுதாகரன் இருவரும் உறுதிப்படுத்தி யுள்ளார்கள். மூட நம்பிக்கையின் சாயல் சிறிது இருந்தாலும், அதனை எதிர்த்துப் போராடுவது என்பது அலைபோல பெருகிவரும் இந்த நேரத்தைவிட இந்த அறிவிப்புக்கு வேறு நேரம் பொருத்த மாக இருக்க முடியாது. கேரளாவில் பொதுமக்களின் பெரும் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் மகர விளக்கைப் பற்றிய இந்த அறிக்கை பாராட்டத் தக்கதே. மூட நம்பிக்கையின் கடைசிக் கோட்டை இடிந்து விழுந்ததற்காக அல்ல இந்தப் பாட்டு; இந்த மகர விளக்கு நிகழ்ச்சியில் அரசுக்கும் பங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட நேர்மைக்குத்தான் இந்தப் பாராட்டு. மகர தொடக்க நாளுக்கு தெய்வீக மதிப்பைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மகர விளக்கு நிகழ்ச்சி ஒரு ஆன்மிக மோசடியே என்று பரவலாக மக்களாலும், குறிப்பாக பகுத்தறிவாளர் கள், நாத்திகர்களாலும் வெளிக் கொண்டு வர முயன்ற பல முயற்சிகள் காவல் துறையினராலும், பவனத் துறையினராலும் காட்டுத்தனமாக நசுக்கப்பட்டன.
தினமலர் சொல்லுவது என்ன?
இந்த மகர விளக்கு பொன்னம்பலம் மலைப் பகுதியில் மூன்று முறை ஒளிர்ந்து மறையும். இதைக் கண்ட பின்புதான் அய்யப்பப் பக்தர்கள் வீடு திரும்புவர். மலைப் பகுதியில் தெரியும் இந்த மகர விளக்குத் தரிசனம் இயற்கையானது என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், அந்த விளக்கு ஒளிரும்போது சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் அந்தப் பகுதியையே அதிர வைக்கும்.
ஆனால், இந்த மகர விளக்கு இயற்கையானது அல்ல; செயற்கையா னது. தேவஸ்வம் போர்டு அதிகாரிகளால் ஏற்றப்படுகிறது என, இக்கோயில் தலைமைத் தந்திரியின் குடும்பத்தினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் ராமன் நாயரும் தெரிவித்துள்ளனர். (தினமலர், 29.5.2008)
இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு சார்பில் கோயிலில் நடக்கும் இந்த மோசடி குறித்து கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே.நாயனாரிடம் கூறியதாக ஜோசப் எடமருகு கூறினார். (ஜோசப் எடமருகு பேட்டி, விடுதலை 21.2.1993)
டில்லியில் இருந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தில் தலைவர் ஜோசப் எடமருகினை நேரில் அழைத்தவரே _ டில்லிக்கு வந்திருந்த கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார்தான்; அப்பொழுதுதான் இதுபற்றிக் கூறினார்.
மகர ஜோதி மோசடிதான். எங்களுக்கே தெரியும். அந்த இடத் திற்குப் போக முயற்சிக்க வேண்டாம் என்று கூறினர் என்று எடமருகு பேட்டியில் பதிவு செய்துள்ளார் (விடுதலை 21.2.1993 பக்கம் 1)
மத சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி களுக்குத் தெரியாதா? தெரிந்துதானே வினாவைத் தொடுத்துள்ளார்கள். மகரஜோதி உண்மையானதுதானா? மனிதர்களால் காட்டப்படுகிறதா? என்று நீதிபதிகளே கேட்ட பிறகு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஒரு மார்க்ஸிஸ்ட் முதல் அமைச்சர் மகர ஜோதி மோசடியை அம்பலப்படுத் திட முன் வந்திருக்க வேண்டாமா?
இந்த மகரஜோதி மோசடி காரணமாகத்தானே கூட்ட நெரிசலில் மக்கள் பலியாகிறார்கள்? சிந்திக்க வேண்டாமா?
மகர ஜோதி மோசடிதான். எங்களுக்கே தெரியும். அந்த இடத் திற்குப் போக முயற்சிக்க வேண்டாம் என்று கூறினர் என்று எடமருகு பேட்டியில் பதிவு செய்துள்ளார் (விடுதலை 21.2.1993 பக்கம் 1)
மத சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி களுக்குத் தெரியாதா? தெரிந்துதானே வினாவைத் தொடுத்துள்ளார்கள். மகரஜோதி உண்மையானதுதானா? மனிதர்களால் காட்டப்படுகிறதா? என்று நீதிபதிகளே கேட்ட பிறகு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஒரு மார்க்ஸிஸ்ட் முதல் அமைச்சர் மகர ஜோதி மோசடியை அம்பலப்படுத் திட முன் வந்திருக்க வேண்டாமா?
இந்த மகரஜோதி மோசடி காரணமாகத்தானே கூட்ட நெரிசலில் மக்கள் பலியாகிறார்கள்? சிந்திக்க வேண்டாமா?

ரமலான் புனித ரமலான்
ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான் ,,ரமலான் புனித ரமலான் ,ரமலான் புனித ரமலான் ,இதயம் எல்லாம் கனிந்து பணிந்து இறை உணர்வில் சிறந்த மாதம் ரமலான் புனித ரமலான் ஈகை குணமும் இறக்க மனமும் மலர்ந்த மாதம் நல்ல தியாக உணர்வும் நியாய

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
முன்னுரை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கல்வியில் சாதனை படைத்த சகோதரிகளை நமது தளத்தில் அறிமுகப் படுத்தியபோது அவர்களது நிழற்படங்களுடன் அறிமுகப் படுத்தினோம். அதற்கு முன்னரும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்ட சகோதரியரைப் பற்றியும் விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றியும் நிழற்படத்துடன் செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.
அவற்றுள் செவிப்புலனும் பேச்சுத்திறனும்

மண்ணறை விசாரணை!
மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை

Subscribe to:
Posts (Atom)