வருவாய் துறை


1 .முதியோர் ஓய்வூதியம்

தகுதிகள்
1 . 65 வயது மற்றும் அதற்கு மேல்
2 .வருமானம் எதும் இல்லாதவர்கள்
3 .20 வயதிற்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன்(மகனின் மகன்) ஆதரவு அளிக்கக்கூடியவராக இருத்தல் கூடாது.
4 .ரூபாய் 5000 க்கு உட்பட்ட ஒரு கூரை அல்லது ஒரு ஒட்டுவீட்டைத் தவிர வேறு சொத்துக்கள் இருக்கக்  கூடாது.

உதவி தொகை :மாதம் ரூபாய் 400 /.

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை:

ஒரு இலவச வேட்டி/ சேலை மதிய திட்டத்தில் பங்கெடுப்போருக்கு மாதத்திற்கு 2 கிலோ இலவச அரிசி அல்லது உணவு திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்தில் 4 கிலோ இலவச அரிசி.

2 . உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியம்

 தகுதிகள்
45 வயதிற்கு மேல் உடல் ஊனமுற்ற ஆதரவு இல்லாத ஏழை 60 %மற்றும் அதற்க்கு மேல் ஊனம். முழுவதும் கண்பார்வை அற்றவர்களுக்கு வசத்து வரம்பு இல்லை.

உதவி தொகை :மாதம் ரூபாய் 400 /.

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை:

ஒரு இலவச வேட்டி/ சேலை மதிய திட்டத்தில் பங்கெடுப்போருக்கு மாதத்திற்கு 2 கிலோ இலவச அரிசி அல்லது உணவு திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்தில் 4 கிலோ இலவச அரிசி.

3 . ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம்
 தகுதிகள்:

1 .18 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்  2 .மறுமணம் செய்திருக்கக் கூடாது .3 வருமானம் ஏதும் இன்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கப்படும்.4 .ரூ 5000 மேல் சொத்து இருத்தல் கூடாது.

உதவி தொகை :மாதம் ரூபாய் 400 /.

4 .கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்.
 தகுதிகள்:
கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஏழை வயது 30 க்கு மேல், குறைந்து 5 வருடங்கள் பிரிந்து வாழ்பவர். தமிழ் நாட்டில் நிலையான விலாசம் உள்ளவர்.2 .வருமானம் ஏதும் இன்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கப்படும்.3 .ரூ 5000 மேல் சொத்து இருத்தல் கூடாது.

உதவி தொகை :மாதம் ரூபாய் 400 /.
ஒரு இலவச வேட்டி/ சேலை மதிய திட்டத்தில் பங்கெடுப்போருக்கு மாதத்திற்கு 2 கிலோ இலவச அரிசி அல்லது உணவு திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்தில் 4 கிலோ இலவச அரிசி.

விபத்து நிவாரணம்

தகுதிகள் :

விபத்தில் இறந்தவர் குடும்பத் தலைவராக சம்பாதிப்பவராக இருந்திருக்க வேண்டும். அரசு அனுமதிக்கப்பட்ட 44 வகையான தொழில்களில் ஏதாவது ஒன்றில் தொழிலாளராக இருந்திருக்க வேண்டும்.

உதவி  தொகை:
இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 15000 , காயமடைந்தது  உடல் ஊனமுற்றால் ரூ 5000 முதல் ரூ 10000 கட்டிய தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ 25000 இறந்த ஒன்றரை வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய படிவங்கள்:

1 . உரிய படிவத்தில் மனு
2 . முதல் தகவல் அறிக்கை
3 . இறப்பு சான்று

மேலும் விபரங்களுக்கு உங்கள் தாலுகா தாசில்தாரை தொடர்பு கொள்ளவும்.
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen