வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து

வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து  
 
அகழ்போர் பற்றி அதர்வன வேதம்
அதர்வனவேதம் நூல் 20, அத்தியாயம் 21, சுலோகம் 6, ''விசுவாசிகளின் இறைவன், போர்க்களத்தில் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்வதில் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து போரின்றி வெற்றியை வழங்கினான். எதிரிகள் ஆடல் பாடலுடன் போர்க்களத்தில் திளைத்திருந்தும் கூட"


1. அகழ்ப்போரில் இறைத்தூதருக்கு வழங்கிய இனிய வெற்றியை அதர்வனவேதம் மேற்கண்டவாறு கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், முமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, ''இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.(அல்குர்ஆன் 33:22)
2. சமஸ்கிருத சுலோகத்தில் இடம் பெறும் வார்த்தை ''கரோ" அரபியில் மொழியாக்கம் செய்தால் அஹ்மத் எனும் இறைத்தூதரின் மற்றொரு பெயரைக் குறிக்கும்.
3. அகழ்ப்போரில் 10 ஆயிரம் எதிரிப்படையை சந்தித்த முஸ்லிம் போர் வீரர்கள் 3 ஆயிரம் பேர் மட்டுமே.
4. சுலோகத்தின் சமஸ்கிரத வார்த்தை ''அப்ரதினி பஷ்யாஹ்" என்பதன் பொருள் போரிடாமல் எதிரிகள் விரட்டப்பட்டு வெற்றி எனப்பொருள்.

ரிக் வேதம்
ரிக் வேதம் நூல் 1, அத்தியாயம் 53, சுலோகம் 9, ''அஹ்மத் தம் இரட்சகனிடமிருந்து அறிவையும், மார்க்க சட்டங்களையும் சூரியனிலிருந்து வரும் ஒளிபோல் பெற்றார். அவருக்கு மார்க்க சட்டம் (ஷரிஅத்) வழங்கப்பட்டது".
 
குர்ஆன் கூறுகிறது:
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறு எதற்கும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் (அல்குர்ஆன் 34:28)
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen