இறைத்தூதர்களுக்கென இந்து மதத்தில் எந்தக் கோட்பாடும் இல்லை. இருப்பினும் அவதாரங்கள் என்று கோட்பாடு உள்ளது. ''அவ்தார்" என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு ''கீழே இறங்கி வருதல் "எனப் பொருள். அவ்தார் என்னும் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் இந்து இதிகாசாங்கள் படி கடவுள் பூமிக்கு உடல் உருவம் கொண்டு இறங்கி வருதல் எனப் பொருள். சுருக்கமாக கடவுள் பூமிக்கு ஏதேனும் உருவம் கொண்டு இறங்கிவருதல் என உணரலாம். இந்து மத விசுவாசப் படி கடவுள் மதத்தைப் பாதுகாக்க நீதியை நிலை நாட்ட சட்டங்களை அமுல் படுத்த மனித சமுதாயத்துக்கு உணர்த்த சில உருவங்களில் அவதாரம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார் என்பதாகும். வேதங்களில் அவதாரங்கள் பற்றி எந்த குறிப்பீடுகளும் இல்லை. குறிப்பாக ஸ்ருதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்ருதிகளில் அவதாரங்கள் குறித்த செய்திகள் உள்ளன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதராங்கள் பற்றிய செய்திகள் மலிந்து காணப்படுகின்றன. பகவத் கீதையில் 4ம் பக்கம் ஸலோகம் 7-8 கூறுகிறது. எங்கெல்லாம் அநீதி தலை தூக்கி தர்மம் சரிகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் இறங்குவேன் என கடவுள் கூறுகிறார். நீதியை நிலைநாட்ட, அநீதியை ஒழிக்க, மார்க்க சட்டங்களை நிலை நிறுத்த நானே பூவுலகுக்கு வருவேன். ஆக பகவத் கீதையின் பிரகாரம் கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். பூமியின் நீதியை நிலைநாட்டி, அநீதியை அகற்றி மார்க்கச் சட்டங்களை நிலை நிறுத்த கடவுளுக்கு அவதாரம் தேவைப்படுகிறது. புராணங்களின் படியே கடவுள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததை அழகுபடக் கூறுகிறது. விஷ்ணு பகவான் (ஜீவராசிகளை இரட்சித்து உணவு வழங்கும் கடவுள்). பத்து அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அவையாவன
1) மதஸ்ய அவ்தார் – மீன் அவதராம்
2) குர்ம் அவ்தார் – ஆமை அவதாரம்
3) வரஹ் அவ்தார் – பன்றி அவதாரம்
4) நரஷிம்ம அவ்தார் – பாதி மனிதன் பாதி சிம்ம அவதராம்
5) வாமண அவ்தார் – பிராமன் அவதாரம்
6) பரஷுராம் அவ்தார் – பரசுராமன் அவதாரம்
7) ராம் அவ்தார் – ராமரின் (ராமாயண) அவதாரம்
8) கிருஷ்ணா அவ்தார் – பகவத் கீதையின் கிருஷ்ணர் அவதாரம்
9) புத்த அவ்தார் – கெளதம் புத்தரின் அவதாரம்
10) கல்கி அவ்தார் – கல்கியின் அவதாரம் (ஆதாரம்: ரிக் வேதம் சம்ஹித் பாகம்-12 பக்கம் 4309 ஸ்வாமி சத்ய பிரகாஷ் சரஸ்வதி)
ஆக வேதங்களிலிருந்து கூறும் சத்தியப் பாதையிலிருந்து கொஞ்சம் கொச்சமாக உண்மைக்குப் புறம்பான வழிகளுக்கு அழைத்துச் செல்லும் அவதாரங்கள் இவைகள் தாம்.
1. மனிதனைப் புரிந்து கொள்ள கடவுளுக்கு மனித உருவெடுக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மதஙகள் பூமிக்கு கடவுளின் மனித உருவ வருகையை நம்பிக்கை கொண்டுள்ளன. அதற்கு சரியான மனோதத்துவ முறைப்படியான சமாதானத்தை அம்மதங்கள் கூறுகின்றன சர்வ வல்லமை படைத்த கடவுள் அதிக புனிதமானவன். எனவே அவனுக்கு கடினங்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள், பின் விளைவுகள் (மனிதனுக்கு நேர்பவை) பற்றிய அனுபவங்கள் சிந்தனைகளை அவன் அறியமாட்டான். ஒரு மனிதன் மனவேதனையின் போது எப்படி சிரமப்படுகிறான் என்பதை கடவுள் அறியமாட்டார். எனவே துன்பக் கடலில் நீந்தும் மனித சமுதாய மத்தியில் மனித உருவில் தோன்றி மனிதனின் குறை நலன்களுடன் கூடிய கடவுள் மனித அவதாரம் எடுத்து வருகிறார் என மிக லாவகமாக அவதாரங்களை நியாயப்படுத்கின்றன புராணஙய்கள்.
2. படைப்பவர் உபயோகிக்கும் முறை தயார் செய்தல்: ஒரு டேப் ரிக்கார்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர் (படைப்பவர்) அதனை இயக்குவது எவ்வாறு? எந்த பட்டனை அழுத்தினால் ஒலி நாடா முன்பாக செல்லும், பின்னால் செல்லும், நிற்கும், , இயங்கும், பாடும் மற்றும் பதிவு செய்யும் என்ற செய்முறைகளைத் தெரிவிக்கும் ஒரு விபரத்தை கருவியுடன் சேர்த்து தருவார் அந்த விபரத்தில் என்னென்ன செய்யக் கூடாது? என்று முழுவிபரங்களும் அதில் இருக்கும். இந்த டேப் ரிகார்ட்ரைத் தயாரிப்பவர், அதற்காக டேப் ரிகார்டர் அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதற்குரிய செயல்முறைகளை விவரித்து ஒரு பிரசுரம் கருவியுடன் வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தான். அத்தூதர்களுக்கு வேதங்களையும் இறக்கியருளினான். அவ்வாறு இறக்கியருளப்பட்ட இறுதி நபிக்கு இறங்கிய இறை வேதமே குர்ஆன் படைத்த இரட்சகனால் வாழும் முறையையும் அவ்வாழ்வின் சுவையை இனிமையுடன் சுவைக்கும் மறுமைப் பேற்றையும் தவறினால் கிட்டும் நரகவேதனையையும் விவரமாக விளக்கும் வாழ்க்கை நடைமுறைத்திட்டமே அருள் மறை குர்ஆன் எது நல்லது? எது கெட்டது? எனப்பிரித்தறிவிக்கும் அல்லாஹ்வின் செய்முறை விளக்கமே குர்ஆன். கடவுளே மனித உருவில் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மனித சமுதாயத்தில் கடவுளுக்கு எவர் விருப்பமானவரோ அவரை கடவுள் தன் இடத்துக்கு தேர்வு செய்து அவரைத் தூதராக்கி அவர் மூலமாக தான் நாடும் செய்திகளைத் தன் படைப்பினங்கள் வரை கொண்டு சேர்க்கும் திறன் கடவுளுக்கு உண்டு அவ்வாறு கடவுளால் தேர்வு செய்யப்பட்ட மனித சமுதாயத்தைச் சார்ந்த தூதர்களே இறைத்தூதர்களாவார்கள்.
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)
இஸ்லாம் கூறுகிறது மனிதன் இப்பூவுலகுக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வருகிறான். வாழ்ந்து மரணித்த மனிதன் அடக்கஸ்தலத்தில் ஒரு வாழ்வைச் சந்திக்கிறான் (மண்ணறை வாழ்வு) அதன் பின் ஒரு நாள் அவன் தன் இரட்சகனால் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படுகிறனான். மண்ணறையிலிருந்து. பின்னர் அவன் அணு அளவும் மோசம் செய்யப்படாமல் விசாரிக்கப்பட்டு நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சுவனத்துக்கம் தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகுக்கும் அனுப்பப்படுகிறான்.
இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களமே
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)
படைத்த இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து உலக வாழ்வில் நடந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவான். சுவனில் நுழைவான். கட்டளைக்கு மாறு செய்தல் இத்தேர்வில் தேர்வு பெற மாட்டான். நரகில் நுழைவான்.
மறுமையில் கூலி கொடுக்கப்படுகிறான்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:8)
இதனை அரபியில் "ஜன்னத்" என்பர் சகல செழிப்புகளும் வளங்களும் அடங்கிய நந்தவனம் என்று இதன் பொருள். குர்ஆன் வசனம் சுவனம் பற்றிக் கூறும் போது சுவனத்தின் அடியில் நதிகள் ஒடுவதாக கூறுகிறது. அந்நதிகள் பால், தேன் போன்றவைகள். பலதரப்பட்ட கனி வகைகளின் சோலைகளால் ஆனது. எவரும் முதுமையடைய மாட்டார்கள். கெட்டவார்த்தைகளைக் கேட்டகமாட்டார்கள். அங்கு சாந்தியும் சாந்தமும் மட்டுமே நிலவும்.
இதனை அரபியில் "ஜஹன்னம்" என்பர். நெருப்பினால் வேதனை செய்யப்படும் இடம் என்று பொருள். இந்நரக நெருப்பின் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களும் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. (66:10)
சமஸ்கிருதத்தில் புனர் ஜன்மம் அல்லது பூரண ஜன்மம் என்று கூறுவர். மரணத்துக்கு பின் மீண்டும் மறுபிறவி எடுத்தல் எனதே இதன் மையக்கருத்து. வேதங்களிலோ உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவி, மனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல், மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல், என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது. இவ்வாறு மறு பிறவி தத்துவம் படைத்த இரட்சகனின் நீதித்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது.
ரிக் வேதம் நூல் 10, அத்தியாயம் 16, ஸ்லோகம் 4 கூறுகிறது சமஸ்கிருத வார்த்தை ''சுக்ரிதம் யு லோகம்" என்பதன் பொருள் உண்மை நிரந்தர உலகம் அல்லது பயபக்தியுடையோருக்குறிய உலகம் என்பதாகும். அதன் அடுத்த ஸலோகமோ இவ்வுலகவாழ்விற்குப் பின் மீண்டும் ஒர் வாழ்க்கை உரியது என்று உறுதிப்படுத்துகின்றது.
சுவர்க்கம் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதர்வன வேதம் நூல் 4 அத்தியாயம் 34 ஸ்லோகம் 6
இவ்வுலக (சுவன) வாழ்வில் உங்களை மகிழ்விக்கும் வெண்ணெய், தேன், சுத்தமான நீர், பால், தயிர் போன்றவை உங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி உங்களின் ஆன்மாவை மகிழ்விக்கின்றன. மேலும் பலன்தரும் பல சுகங்களும் இங்கு உண்டு. அதர்வண வேதம் நூல் 10 அத்தியாயம் 95 ஸ்லோகம் 18 சுவனத்தின் சிறப்பதைக் கூறுகிறது.
சமஸ்கிருத மொழியில் நரகத்தினை ''நரக ஸ்தானம்" என்பர். ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.
ஒரு மனிதன் படைக்கப்படும் முன்பே படைப் பாளனாகிய இரட்சகன் அந்த மனிதன் எங்கு யாருக்கு எப்படி பிறப்பான். எவ்வாறு வாழ்வான் இறுதியில் எங்கு சென்று சேர்வான் என்பதை, ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளான்.
இரு மனிதர்களின் பிறப்பில் உள்ள பாகுபாடு இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொன்று அங்கஹீனமாகவும், ஒரு குழந்தை ஒரு பெரிய பணக்காரன் வீட்டிலும் மற்றொன்று ஒரு வக்கற்ற ஏழை வீட்டிலும் பிற்க்கிறது. இவ்வாறு அவை ஏற்றத்தாழ்வுடன் பிறப்பதற்கு காரணம் அவைகளின் (கர்மங்களின்) அடிப்படையிலேயே இப்பிறவியில் பாகுபாடு உள்ளது, என்பது இந்துமத சித்தாந்தம். ஆனால் மறு பிறவி என்பதற்கு எந்த ஆதாரப் பூர்வமான மதசம்மந்தமான தெளிவுகளும் இல்லை.
இஸ்லாம் கூறும் நல்ல தீய செயல்கள்(அமல்கள்) குறித்து அருள்மறைக் குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)
நம்மை எப்படியெல்லாம் சோதிக்கிறான் என்பதற்கு சில ஆதாரங்களை கீழ் கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன.'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) -(2:214)
''நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?-(29:2)
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (21:35)
மரணத்துக்குப் பின் மறுபிறவி எடுத்தல், திருஅவதாரம் எடுத்தல் (தெய்வமாகுதல்) பிற உடலில் புகுந்து மீண்டும் ஜன்மம் எடுத்தல் ஆகியவை இந்து மதத்தின் சித்தாந்தமாகும். மறுபிறவி பற்றிய இந்து மதக்கோட்பாட்டில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. முன்பிறவியில் செய்த செயல்களின் விளைவாகவே இப்பிறவியில் பிறக்கும் குழந்தைகள் அழகுடன் அல்லது அங்கஹீனமாக பிறக்கின்றன (கர்மம்) அது போன்ற கருக்துக்களும் இந்து மதச் சித்தாந்தத்தில் உண்டு.
பகவத்கீதை அத்தியாயம் 2, ஸ்லோகம் 22 கூறுகிறது. புத்தாடை அணியும் ஒருவன் பழைய ஆடையை விட்டுவிடுவது போன்று ஆன்மா புதிய உடலை ஏற்றுக் கொண்டு பழைய உடலை (உபயோக மற்றதை) விட்டு விடுகிறது.
மறுபிறவி சித்தாந்தத்தை ‘ப்ரக தரண்யா உபநிஷம் பாகம்’ 4 அத்தியாயம் 4 சுலோகம் 3 கூறுகிறது. ஒரு கம்பளிப்பூச்சி புல்லின் மேல் நுனியை வளைத்து நெளித்து ஓடித்துவிட்டால் அதிலிருந்து புதிய மேல்பாகம் முளைப்பிப்பது போல் ஒரு உடலிலிருந்து வெளிப்பட்ட ஆன்மா மற்றொரு உடலில்புகுந்து விடுவதால் திருப்தியுறுகிறது. கர்மம்(கர்மா)-காரணமும்விளைவிக்கும் வினை அவனது மனநிலையை எண்ணத்தைச் சார்ந்தது. இதற்கு கூறும் விளக்கம். வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினைஅறுப்பான். கோதுமை விதைத்தவன் எவ்வாறு அரிசியை அறுவடை செய்ய இயலாதோ அதுபோல இவ்வுலகில் செய்யும் நல்லறங்களின் கூலியை மறுபிறவியில் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்க மளிக்கப்படுகிறது.
ஒருவர் புரியும் நல்லசெயல்கள் ''தர்மா" என அழைக்கப்படுகிறது. ஆகசிறந்த நல்லறங்கள் (கர்மங்கள்) புரிபவர் மறுபிறவியில் அதன் பலனை நுகர்ந்து கொள்வார். கெட்ட காரியங்களைச் செய்பவர் செய்த கர்மத்தின் விளைவை மறுபிறவியில் கண்டு கொள்வார். ஆக நல்ல, கெட்ட அறங்கள் இவ்வுலக வாழ்வில் அனுபவிப்பதோடு மறுபிறவியிலம் அதன் பாலை நுகர்வர் என்பது இச்சித்தாந்தத்தின் சுருக்கம்.
மோட்சம் (மறுபிறவியிலிருந்து விடுதலை)
மோட்சம் என்பது மறுபிறவி போன்ற மீண்டும் ஜன்மம் எடுக்காமல் முக்தியடைவது இதனை ''சம்சாரா" எனக்கூறுவர். இந்து மத நம்பிக்கைப் பிரகாரம் ஒரு நாள் மறுஜன்மம் எடுக்கும் இந்நிலை முடிவுறும். அதாவது அந்த படைப்பினத்தின் மறுபிறவி எடுத்து தீர்க்கக் கூடிய எந்த கர்மமும் பாக்கி இல்லாது இருந்தால் மறுபிறவி எடுக்க மாட்டான் என்பது இதன் பொருள் மறு பிறவி(மீண்டும்) பிறவி (ஜன்மம்) எடுத்தல் வேதங்களில் குறிப்பிட படவில்லை. அதுபோன்று ஆன்மாக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பிவேசிக்கும் எந்தக் கருத்தும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.