
‘வட்டியை என்னுடைய காலடியில் மிதிக்கிறேன்! கொடுத்த தொகைக்கு அதிகமாக எதையும் இனிமேல் பெறக் கூடாது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் வீர முழக்கம் அன்றைய ஏழைகளுக்கு மறுவாழ்வு தந்தது.
வட்டியின் இறுதி முடிவு கஷ்டத்தில்தான் முடியும்! வட்டிப் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் பரகத் ‘அபிவிருத்தி’ இருக்காது! வட்டி வாங்குபவனும் கொடுப்பவனும் கணக்கெழுதுபவனும் அதற்காக சாட்சி சொல்பவர்களும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியோர்! அந்த சாபத்தில் அனைவரும் சமமானவர்கள்! என்றெல்லாம் மார்க்கம் எச்சரிக்கிறது.
வட்டி வாங்குவது அல்லாஹ்வுடன் தொடுக்கும் போர் என்று கூட அல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.
வட்டியை நோக்கிச் செல்பவன் தன்னை அழித் தொழிக்கும் பாதாளப் படுகுழியை நோக்கி அடியெடுத்து வைக்கின்றான். அவனை அழிவிலிருந்து காப்பாற்றுவதற் காகதான் அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரிக்கின் றார்களே தவிர இவன் வட்டி வாங்குவதாலோ கொடுப்பதாலோ அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.
வாழ்வின் எதார்த்தத்தை மறந்து வாழும் மனிதன் ஆடம்பர வாழ்க்கையை ஏறெடுத்துப் பார்க்கிறான். போலிக் கவர்ச்சிகள் உள்ளத்தை கொள்ளை கொள்ள, தன் தகுதிக்கு மீறிய முடிவெடுத்துக் கொண்டு கல்லா வைப் பார்க்கிறான் காலியாக உள்ளது. வீடு தேடிவந்து வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் நினைவுக்கு வரவே, சில மணித்துளிகளில் பைனான்ஸ் கம்பெனி, பேங்க், அடமானக் கடை, கந்து வட்டி ஆகியோரின் வாசலில் தன்னை அடமானம் வைக்கிறான். அவன் வைப்பது அடமானம் மட்டுமல்ல. அவன் மானத்தையும்தான்!
யூதர்களால் விரிக்கப்பட்ட வட்டி என்ற மோக வலையிலும் பெண்களின் காமவலையிலும் அன்றைய பாலஸ்தீனியர்கள் சிக்கிக் கொண்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் சொந்த நாட்டிலேயே யூதர்களுக்கு அடிமையாகி, மறு வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகப் பொருளாதார நிர்ணயப் புருஷனாக பீற்றிக் கொண்ட அமெரிக்கா, வட்டி வங்கிகளின் சரிவால் பிற நாடுகளிடம் பிச்சை எடுத்ததையும், வட்டி வங்கி களின் ஒத்துழைப்புடன் போலி ஆடம்பரங்களையும் அனாச்சாரங்களையும் அரங்கேற்றி வந்த துபை பிறரிடம் யாசகம் கேட்டு நின்றதையும் கண்ட பிறகும் கூட வட்டி மோகம் குறைய வேண்டாமா?
ஒரு நாட்டின் அரசாங்கமே வட்டியின் விளைவை விட்டும் தம்மை காத்துக் கொள்ள முடியாதபோது, ஒரு குடிமகனால் மட்டும் எப்படி தங்களைக் காத்துக் கொள்ள முடியும்? சிந்திக்க வேண்டாமா?
தன் ஆரம்பர வாழ்க்கைக்காக கணவனுக்குத் தெரியாமல் வட்டி வாங்கியதால் பிறரிடம் தங்கள் சொத்தை மட்டுமல்ல, தங்கள் கற்பையும் இழந்த பெண்கள் எத்தனை பேர்! ஏன் இந்த அவல நிலை!
ஊர் நிசப்தாக இருக்கும் மதிய வேளையில் பெண்கள் தனித்திருக்கும் வீட்டுக்குள் வட்டி வசூல் என்ற பெயரில் வட்டிக் கயவர்கள் நுழைவதற்கு காரணமாக இருப்பது எது?
முஸ்லிம் சமூக கட்டமைப்பையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதில் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்குண்டு! இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக ஜகாத் இடம் பெற்றிருப்பதும் இதனால்தான்! எனவே இஸ்லாமிய நிதியகம் ‘பைத்துல்மால்’ என்பது இஸ்லாத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இஸ்லாமிய அரசுத்துறைகளில் நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்றுவரை அது தனி இலாகாவாக இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை சென்ற செப்டம்பர் இதழ் ‘சமுதாய ஒற்றுமை’யில் — தனிக் கட்டுரையாக பதிவு செய்திருந்தோம்.
முஸ்லிம் சமூக கட்டமைப்பையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதில் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்குண்டு! இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக ஜகாத் இடம் பெற்றிருப்பதும் இதனால்தான்! எனவே இஸ்லாமிய நிதியகம் ‘பைத்துல்மால்’ என்பது இஸ்லாத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இஸ்லாமிய அரசுத்துறைகளில் நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்றுவரை அது தனி இலாகாவாக இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை சென்ற செப்டம்பர் இதழ் ‘சமுதாய ஒற்றுமை’யில் — தனிக் கட்டுரையாக பதிவு செய்திருந்தோம்.
பைத்துல்மால் என்பது இரண்டு முக்கியப் பிரிவுகளை கொண்டதாக செயல்பட்டு வந்திருக்கிறது.
1) கடமையான ஜகாத்தை வசூலித்து அத்தவ்பா அத்தி யாயத்தின் 60 வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் எட்டு வகையினருக்கும் முறையாக வழங்குவதற்கான பிரிவு. இதனை ‘பைத்துஸ் ஸகாத்’ ஜகாத் நிதியகம் என்று அழைக்கப்படுகிறது.
2) பொதுவான தான தர்மங்களைப் பெற்று, இஸ் லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பொது மக்களுக்கும் தேவையான காரியங்களை நிறைவேற்றுவதற்கான பொது நிதியகம் பைத்துல் மால்.
இந்த இருவகை திட்டங்களை இணைத்ததாகவே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ‘பைத்துல்மால்’ இயங்கி வந்தன.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத காரணத்தால் ‘பைத்துல்மால்’ என்பது தேவையற்றது என்று கருதிவிட முடியாது. ஜகாத் கடமையோ, பொதுப் பணியோ இஸ்லாமிய ஆட்சியால் உருவானதல்ல. அவை மார்க்கக் கடமையாகும். எனவே அந்தக் கடமையை முறையாக நிறைவேற்றுவதற்காக இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியத் தேவையாகும்.
அல்லாஹ்வின் பெருங்கருணையால் தன்னார்வம் மிக்க இஸ்லாமிய சேவகர்களும் இஸ்லாமிய இயக்கங்களும் நிறுவனங்களும் தம்மால் இயன்ற அளவு ‘பைத்துல்மால்’ சேவையாற்றிவருகிறார்கள். அவர்களின் பணி சிறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக!
பைத்துல்மால் பணியை தமிழகத்தில் விரிவுபடுத்திட பல சிந்தனையாளர்களும் செல்வந்தர்களும் அரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஹல்லாக்களின் பள்ளிவாயில்தோறும் பைத்துல்மால்களை ஏற்படுத்தி அந்தந்த முஹல்லாவைச் சார்ந்தவர்களை வட்டிக் கொடுமையிலிருந்து மக்களைகாப்பாற்றிடவும் அந்த மக்களுக்கு அவசியத்தைச் தேவைகளில் பங்காற்றிடவும் சமூக கண்ணியம் காத்திடவும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சமுதாய ஒற்றுமை இதழுக்காக சில நல்லுள்ளங்களைச் சென்று சந்தித்தபோது நம்மை பரிவாக வரவேற்று கருத்துக்களை இதமாகப் பரிமாறிக் கொண்டனர்.
பைத்துல்மால் தொடர்பான திட்டங்களையும் செயல்பாடுகளையும் அவர்களின் அனுபவங்களையும் இங்கே பதிய வைத்துள்ளனர். நீங்களும் உங்கள் பகுதியில் வட்டியை எதிர்த்து பயணிக்க வேண்டும், சமூகத் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் பேட்டிகளை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் சில சிறப்பம்சங்கள் இருக்கலாம். அவைகளை சேகரித்து மிகவும் சிறப்பாக நீங்கள் செயல்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
பைத்துல்மால் தொடர்பான திட்டங்களையும் செயல்பாடுகளையும் அவர்களின் அனுபவங்களையும் இங்கே பதிய வைத்துள்ளனர். நீங்களும் உங்கள் பகுதியில் வட்டியை எதிர்த்து பயணிக்க வேண்டும், சமூகத் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் பேட்டிகளை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் சில சிறப்பம்சங்கள் இருக்கலாம். அவைகளை சேகரித்து மிகவும் சிறப்பாக நீங்கள் செயல்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
பைத்துஸ் ஸகாத்தையும் பைத்துல்மாலையும் மிகவும் கவனமாக பிரித்து தங்களின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மார்க்க அறிஞரின் ஆலோசனைகளுடன் உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் திருப் பொறுத்தத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு, அல்குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு கட்டுப்பட்டு நம் நடவடிக்கைகள் அனைத்தும் அமைய வேண்டும் என்றும் நினைவூட்டிக் கொள்கிறேன். வாருங்கள் பைத்துல்மால்களுக்குச் செல்வோமா?
“அழகிய கடன் அறக்கட்டளை”
இந்திய முஸ்லிம்கள் வங்கிகளில் வேண்டாம் என்று நிராகரித்த வட்டிப் பணம் கடந்த 2005 இல் மட்டும் ரூபாய் 75000 கோடியாகும். (தகவல்:RBI Legal News and Views) இந்தத் தொகை வட்டியில்லா கடன் திட்டத்திற்கு பயன்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் நல்ல நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
இறையச்சத்துடனும் உண்மையான சமுதாய அக்கறையுடனும் பணியாற்றக் கூடிய ஓரிருவர் இருந்தாலே போதும். வட்டியில்லா அழகிய கடனுதவித் திட்டத்தை துவங்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பைத்துல்மால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
நகைகளின் பேரில் மட்டும் கடன் கொடுப்பதால் கடனுக்கு முழுமையான உத்திரவாதம் கிடைக்கிறது. இதுவரை சுமார் 1500 நபர்கள் பயனடைந்துள்ளனர். சென்னை வாசிகளுக்கு மட்டும்தான் என்று வரையறை விதிக்கவில்லை. யாரும் பயன் அடையலாம். சிறுவியாபாரிகளிடம் தினமும் பத்து ரூபாய் வசூலித்தால் கூட வருடத்திற்கு ரூபாய் 3600 கிடைத்துவிடும். பைத்துல்மாலை துவங்க இதுபோன்ற எத்தனையோ எளிய வழிகள் உள்ளன. பள்ளிவாசல்களின் சேமிப்புத் தொகைகளைக் கூட பைத்துல்மாலுக்கு பயன்படுத்தலாம். அதன் நிர்வாகிகளாக பள்ளிவாசல் இமாம்களையே நியமிக்கலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் திருவிடைச்சேரி சோகச் சம்பவத்தைப் பற்றி விவாதிக்கப்பட்டது. பிறகு பைத்துல்மால் மற்றும் ஷரீஅத் கவுன்சில் பற்றி விவரித்தேன். அதில் பங்கேற்ற 120 உலமாக்களில் 40 இமாம்கள் தங்கள் முஹல்லாக்களில் பைத்துல்மால் சேவை துவங்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
பைத்துல்மால் தொடர்பான ஆலோசனைகள் வழங்க அழகிய கடன் அறக்கட்டளை தயாராக உள்ளது.
அழகிய கடன் அறக்கட்டளை, மக்கா மஸ்ஜித் வளாகம், 822, அண்ணா சாலை, சென்னை -2
தொலைபேசி: 044-42141333, email: azhagiyakadan@makkamasjid.com
தொலைபேசி: 044-42141333, email: azhagiyakadan@makkamasjid.com
“ஒரு வருட கால தவணையில் கடன்!- JAQH மதுரை”
மௌலவி. அப்துல்காதர் உமரி, சகோ. பாவாஷா மற்றும் சகோ. ரஃபீக் ஆகியோரால் தலா ரூபாய் 5000 வழங்கி ரூபாய் 15000 ஆயிரத்தைக் கொண்டு சிறிய அளவில், சேவை மனப்பான்மையுடனும் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரையில் சேவையாற்றிவரும் (ஜாக்) பைத்துல்மால். அல்லாஹ்வின் பெருங்கருணையால் இன்று 8 இலட்சம் ரூபாயை முதலீடாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
நகை அடமானக் கடனாக அதிக பட்சமாக ரூபாய் 20000 வரை வழங்கப்படுகிறது. கடனை திருப்பித் தர ஒரு வருட காலம் தவணை வழங்குவதுதான் இந்த பைத்துல்மாலின் சிறப்பம்சம்.
நகைக்கான மதிப்பீடு செய்து அதில் 60% வரை கடன் வழங்கப்படுகிறது. நகைகளை பாதுகாப்பதற் கான லாக்கர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம், குடும்பச் செலவு மற்றும் அவசரக் கடன் தீர்ப்பது போன்ற காரியங்களுக்காக நகையை அடமானமாகப் பெற்று கொண்டு கடன் வழங்கப்படுகிறது.
பைத்துல்மால் என்பது பணம் தொடர்புடைய சேவையாக இருப்பதால் அதனை தனி மனிதர்களால் நடத்துவதை விட ஒரு இயக்கத்தின் தொடர்புடன் செயலாற்றுவதே பல வகைகளில் சிறந்தது என்பது அதன் நிர்வாகிகளின் கருத்து.
கல்வி, மருத்துவம், குடும்பச் செலவு மற்றும் அவசரக் கடன் தீர்ப்பது போன்ற காரியங்களுக்காக நகையை அடமானமாகப் பெற்று கொண்டு கடன் வழங்கப்படுகிறது.
பைத்துல்மால் என்பது பணம் தொடர்புடைய சேவையாக இருப்பதால் அதனை தனி மனிதர்களால் நடத்துவதை விட ஒரு இயக்கத்தின் தொடர்புடன் செயலாற்றுவதே பல வகைகளில் சிறந்தது என்பது அதன் நிர்வாகிகளின் கருத்து.
மூன்று நபர்களை நிர்வாகிகளாகவும் ஏழு நபர்களை ஆலோசனைக் கமிட்டி உறுப்பி னராகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது. கணக்குகள் முறையாக ஆடிட் (தணிக்கை) செய்யப்பட்டு மக்கள் பார் வைக்கு வைக்கப்படுகின்றன.
பைத்துல்மால் பெயரிலேயே வங்கி கணக்கு துவங்கி, வினியோகம் அனைத்தும் வங்கிக் காசோலை மூலமே தரப்படுகிறது.
கடனுக்கு பகரமாக நகை தரமுடியாதவர்கள் மதுரை ஜாக் நிர்வாகத்தின் கீழ் செயலாற்றிவரும் பைத்துஸ் ஸகாத் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஜகாத் பெறத் தகுதியுடையவர்களாக இருந்தால் – பைத்துஸ் ஸகாத்தின் நிதி நிலைமையை அணுசரித்து – அவர்களுக்கான உதவிகள் ஜகாத் நிதியிலிருந்து தரப்படுகிறது.
கடனுக்கு பகரமாக நகை தரமுடியாதவர்கள் மதுரை ஜாக் நிர்வாகத்தின் கீழ் செயலாற்றிவரும் பைத்துஸ் ஸகாத் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஜகாத் பெறத் தகுதியுடையவர்களாக இருந்தால் – பைத்துஸ் ஸகாத்தின் நிதி நிலைமையை அணுசரித்து – அவர்களுக்கான உதவிகள் ஜகாத் நிதியிலிருந்து தரப்படுகிறது.
இதுவரை 300 நபர்கள் பைத்துல்மாலால் பயனடைந்துள்ளார்கள். பதினைந்து இலட்சம் ரூபாய் வரை வருடாந்திரப் பரிவர்த்தனை நடக்கிறது. மதுரை மாவட்டத்தை சார்ந்தவர்களிடமும் பிறரிடமும் பைத்துல் மாலுக்காக நன்கொடை பெற்றாலும் மதுரை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப்படிவத்திற்காக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது.
பைத்துல்மால் பணியாளர்கள், நிர்வாகிகள், நகையை மதிப்பீடு செய்பவர் ஆகிய அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இலவசமாகவே பணியாற்றுகின்றனர். ஜாக் மர்கஸ்தான் அதன் அலுவலகமாக செயல்படுவதால் ஸ்டேஷனரி செலவுகளைத் தவிர பைத்துல்மாலுக்கென எந்த செலவீனமும் இல்லை.
மதுரை, தெற்கு மாரட் வீதி, கதவு எண் 69ல் இயங்கி வரும் ஜாக் அலுவலகத்தில் பைத்துல் மால் செயல்பட்டுவருகிறது. மேலும் விபரங்களுக்கு, பைத்துல் மால் செயலாளர் பாவாஷாவை தொடர்பு கொள்ளலாம். (செல் 9865593233)
“திண்டுக்கலில் பைத்துல் மால்!”
சமூக சேவையாற்ற 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே ‘திண்டுக்கல் அமானா வெல்ஃபேர் அசோசியேஸன் டிரஸ்ட்’ (Dindigul Amana Welfare Association Trust) Dawat வட்டியில்லா கடன் திட்டத்தை செயல்படுத்தியது. நகை அடமானத்தின் பேரில் ரூபாய் 15000 வரை அதிகபட்சம் நான்கு மாத தவணையில் கடன் வழங்கப்படுகிறது.
இதுவரை சுமார் 30 பேர் பயனடைந்துள்ளனர். அதுபோல் ஜகாத் மற்றும் சதகா வினியோகத்திற்காக பைத்துல்மால் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு இரண்டு இலட்சம் (200000) வரை வினியோகிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில், கல்வி, உடல் ஊனமுற்றோர் கடனுதவி, மருத்துவம், திருமணம், விதவைகளை ஆதரித்தல் போன்றவற்றிற்காக செலவிடப்பட்டு இதுவரை 75 பேர் பயனடைந்துள்ளார்கள்.
தொடர்புக்கு, இஸ்மாயில் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, 94, மதுரை ரோடு, பேகம்பூர், திண்டுக்கல் -2 தொலைபேசி: 94440 77200 Email: ismailsait@gmail.com, www.dawat.co.in
“திண்டுக்கலில் பைத்துல் மால்!”
சமூக சேவையாற்ற 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே ‘திண்டுக்கல் அமானா வெல்ஃபேர் அசோசியேஸன் டிரஸ்ட்’ (Dindigul Amana Welfare Association Trust) Dawat வட்டியில்லா கடன் திட்டத்தை செயல்படுத்தியது. நகை அடமானத்தின் பேரில் ரூபாய் 15000 வரை அதிகபட்சம் நான்கு மாத தவணையில் கடன் வழங்கப்படுகிறது.
இதுவரை சுமார் 30 பேர் பயனடைந்துள்ளனர். அதுபோல் ஜகாத் மற்றும் சதகா வினியோகத்திற்காக பைத்துல்மால் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு இரண்டு இலட்சம் (200000) வரை வினியோகிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில், கல்வி, உடல் ஊனமுற்றோர் கடனுதவி, மருத்துவம், திருமணம், விதவைகளை ஆதரித்தல் போன்றவற்றிற்காக செலவிடப்பட்டு இதுவரை 75 பேர் பயனடைந்துள்ளார்கள்.
தொடர்புக்கு, இஸ்மாயில் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, 94, மதுரை ரோடு, பேகம்பூர், திண்டுக்கல் -2 தொலைபேசி: 94440 77200 Email: ismailsait@gmail.com, www.dawat.co.in
“பள்ளிவாசல்கள் தோறும் பைத்துல்மால் வேண்டும்”
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஜகாத்தும் முக்கிய இடம்வகிக்கிறது. ‘நீங்கள் அவர்களில் பொருளில் இருந்து (ஜகாத்தை) எடுங்கள்!’ (அல்குர்ஆன் 9:103) என்ற அல்லாஹ்வின் கட்டளையும் ஜகாத்தை வசூலிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியமும் ஜகாத் நிதியிலிருந்தே வழங்கலாம் என்ற அல்குர்ஆனின் (9:60) பங்கீட்டி முறையும் இது அரசு துறை சார்ந்த பொறுப்பு என்பதை தெளிவு படுத்துகிறது.
யமன் தேசத்திற்கு ஆளுனராக அனுப்பி வைக்கப்பட்ட முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்க ளுக்கு ‘நீங்கள் அம்மக்களில் செல்வந்தர்களிட மிருந்து ஜகாத்தை வசூலித்து, அம்மக்களின் ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்றும் வசூலகர்கள் மக்களின் உயர்ந்த ரக பொருட்களை ஜகாத்திற்காக எடுக்கக் கூடாது’ என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி வழியனுப்பி வைத்தது ஜகாத் என்பது அரசு அதிகார கட்டமைப்பின் கீழ் இயங்க வேண்டிய துறை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீது ஜகாத் வழங்கும் கடமையுடன் மற்றொரு பொறுப்பும் அதிகமாகி றது. முஸ்லிம் சமூக கட்டமைப்புடன் இயங்கிவரும் முஹல்லா ஜமாஅத்களை ஜகாத் வினியோகச் செயல் வீரர்களாக உருவாக்குவதுதான் அந்தப் பொறுப்பு!
தொழுகையை நிலைநாட்டுங்கள்! நோன்பைக் கடைபிடியுங்கள்! என்ற அல்லாஹ்வின் கட்ட ளைகளை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசல் நிர்வாகிகள் பாடுபடுகிறார்கள். பள்ளிவாயில் களை நிர்வகிக்க இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோருக்கு ஊதியம் வழங்குகிறார்கள். நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்க உரிய ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் தொழுகையுடன் அல்லாஹ் இணைத்தே கூறும் ‘ஜகாத்தை கொடுங்கள்’ என்ற கடமையிலிருந்து அந்நியமாகி நிற்கின்றார்கள். தொழுகைக் கடமையையும் ஜகாத் கடமையையும் பிரித்துப் பார்ப்பவர்களுடன் நான் போரிடுவேன் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது.
ஒருவன் தனக்கு சொந்தமில்லாத செல்வத்தை தர்மம் செய்யமுடியாது. ஜகாத் என்பது ஜகாத் கொடுப்பவருக்கு சொந்தமில்லாத செல்வமாகும். அதனை பைத்துல்மாலுக்கு வழங்குவதே அவருடைய கடமை. பைத்துல்மால்தான் அதனை முறையாக வினியோகிக்க வேண்டும்.
தனி நபர்கள் தனித்தனியாக ஜகாத்தை வினியோகிப்பதால் ஏற்படும் சமூக பாதிப்புகள்
உண்மையான ஏழைகளுக்கு ஜகாத் சென்றடையாத நிலை.
ஜகாத் பெற தகுதியற்ற பலர் தங்களது யாசகம் கேட்கும் பழக்கத்தை பயன்படுத்தி ஜகாத்தை சுருட்டிக் கொள்ளும் நிலை.
யாசகத்தை ஒழிக்க வந்தது ஜகாத். அதை வீட்டு வாசலிலும் கடைகளிலும் வழங்கப்படுவதால் யாசகர்கள் உருவாக காரணமாகி விடுகிறது.
இதனால் முஸ்லிம் சமுதாய ஏழைகளின் தன்மானம் பாதிக்கப்படுகிறது.
இதனால் முஸ்லிம் சமுதாய ஏழைகளின் தன்மானம் பாதிக்கப்படுகிறது.
ஜகாத் கொடுப்பவரின் தவறுகளை சுட்டிக் காண்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
தனிநபராக ஜகாத் கொடுத்துக் கொண்டிருப்பவர் கள் தங்களது ஜகாத்தை பைத்துல்மாலில் ஒப்படைப்பதுடன், அவர்களால் ஜகாத் கொடுக்கப்பட்டு வந்த ஏழைகளின் பட்டியலையும் பைத்துல்மாலுக்கு வழங்கினால் ஜகாத் வினியோகம் மேலும் முறைப்படுத்தப்பட வசதியாக அமையும்.
பள்ளிவாசல் ஜமாஅத்களில் பைத்துல்மால் அமைக்கும் முறையும் செயல் திட்டங்களும்
நாம் கடந்த மூன்று வருடங்களாக 100க்கும் அதிகமான பைத்துல்மால்களை பள்ளிவாசல் நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளோம். அதற்காக நாம் வகுத்துக் கொண்ட நெறிகள்:
1) பள்ளிவாசல் நிர்வாகிகளில் ஓரிருவர்
2) பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத சுமார் 10 நபர்கள்
3) ஒரு ஆலிம் (மார்க்க அறிஞர்)
ஆகிய மூன்று வகையினரைக் கொண்டு, ஏதாவது ஒரு பெயரில் பைத்துல்மால் நிர்வாகம் அமைக்கப்படுகிறது.
அது பள்ளிவாசல் சார்பாக தனிக் கிளையாகச் செயல்படலாம், அல்லது அதற்காக புதிய டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தலாம். அல்லது சொஸைட்டி ஆக்ட்டின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். பைத்துல்மால் நிர்வாகம் ரூபாய் 50000 (ஐம்பதாயிரம்) பைத்துல் மாலுக்காக வசூல் செய்து அதனைக் கொண்டு தன் சேவையை துவங்க வேண்டும். அதற்கான வருடாந்திரக் கணக்கை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பள்ளிவாசலில் ஜகாத் வசூலித்து முறையாக வினி யோகிக்கும் பைத்துல்மால் உள்ளது என்ற போர்டு பள்ளிவாசலில் தொங்கவிடப்படவேண்டும். ஏழைகளுக்கு கல்வி உதவி செய்தல். முதியோர், திக்கற்றோர், வழிப்போக்கர், விதவை ஆகியோருக்கு மாதாந்திர உதவி (பென்ஷன்) வழங்குதல். ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற பொதுக் காரியங்களில் அந்தந்த ஊருக்கு எது மிக அவசியமானதோ அதிலிருந்து பைத்துல்மால் தனது பணியைத் துவங்கலாம்.
மாதாந்திர உதவிக்குரிய தொகையைத் தவிர வேறு எந்தத் தொகையையும் பைத்துல்மால் தனது கையிருப்புத் தொகையாக வைத்துக்கொள்ளக் கூடாது. ஜகாத் தொகை வந்துவிட்டால் மிகக் குறுகிய தவணைக்குள் பரிசீலித்து உரியவர்களிடம் விரைவாக கொண்டு சேர்த்திட வேண்டும்.
இவ்வாறான கட்டமைப்பில் இயங்கி வரும் பைத்துல்மால் நிறுவனங்களுக்கு SEED (சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை) சார்பாக ரூபாய் 10000 வழங்குகிறோம். ஒவ்வொரு ஜமாஅத்தும் சுயமாக தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். அவைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் கூட்டமைப்பு எதனையும் நாம் ஏற்படுத்தவில்லை.
வட்டியில்லா கடன் உதவித் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்
செல்வந்தர்களிடமிருந்து பொருளாதாரத்தை கடனாகவும் அன்பளிப்பாகவும் தொகையைப் பெற்றுக் கொண்டும், பள்ளிவாசலின் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டும் வட்டியில்லா கடன் உதவித் திட்டத்தை பள்ளிவாசல் ஜமாஅத் துவங்கலாம். நகை அடமானத்தின் மூலமும் தனி நபர் பொறுப்பேற்றலின் அடிப்படையிலும் கடன் வழங்கலாம். இதன் மூலம் முஸ்லிம்களை வட்டிக் கொடுமையிலிருந்து பாதுகாக்க முடியும்.
திரும்பி தர முடியாத நிர்ப்பந்த சூழ்நிலைக்கு தள்ளப் படுபவர்களை ஜகாத் பெற தகுதி பெற்ற கடனாளியாக முடிவு செய்து அவர் தர வேண்டிய கடன் தொகையை ஜகாத் நிதியிலிருந்து பெறலாம்.
தேவை ஏற்படும் பட்சத்தில் கடன் உதவித் திட்டத்திற்காக தனி நிர்வாகத்தையே அமைத்துக் கொள்ளலாம். ஒரு முஹல்லாவில் பல தனித்தனி நிர்வாகத்தை ஏற்படுத்தி, பலரை நிர்வாகியாக தேர்வு செய்வதன் மூலம் பள்ளிவாசலின் நிர்வாகச் சண்டைகளைக் கூட இதன் மூலம் தவிர்க்கலாம்.
முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளால் பள்ளிவாசல் மட்டுமே நிர்வகிக்கப்படுவதால் அவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். ஜமாஅத் நிர்வாகிகளாக தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தம் முஹல்லாவைச் சார்ந்த மக்களுக்கு இது போன்ற பொதுப்பணிகளைச் செய்ய முன்வரும்போதுதான் அவர்கள் ஜமாஅத் நிர்வாகிகளாக மாற முடியுமே தவிர அதுவரை இவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் மட்டும்தான். எனவே ஜகாத் கடமையில் பாராமுகமாகி வாழ்ந்து வரும் ஜமாஅத் நிர்வாகிகள் அல்லாஹ்வின் விசாரணையை அஞ்சிக் கொள்ளட்டும்! தங்களின் முஹல்லாக்களில் பொதுநலப்பணிகளை துவங்கட்டும்!
பைத்துல்மால் பற்றிய ஆலோசனைக்கு ஜனாப் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ், செல்: 98400 40067.
“சிறுசேமிப்புத் திட்டம் பைத்துல்மாலாகியது – த.மு.மு.க. விருதுநகர்”
2005ம் ஆண்டு அழகிய கடன் மற்றும் சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் ரூபாய் 10000 நன்கொடை யாகவும் ரூபாய் 10000 கடனாகப் பெற்றும் ஆக ரூபாய் 20000த்தை கொண்டு துவங்கப்பட்டதுதான் விருதுநகர் பைத்துல்மால். இதுவரை 1005 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். 30 இலட்சம் வரை பரிவர்த்தனம் செய்யப்பட்டுள்ளது.
சேமிப்புத் திட்டம்தான் விருதுநகர் பைத்துல்மாலின் முதுகெழும்பு! விருதுநகர் பைத்துல்மால் 100 நாள் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. குறைந்தது 20 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை தினமும் வசூலிக் கப்படுகிறது. இதில் ஏழைகள், சிறு வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்கள் அனைவரும் சேமித்து வருகின்றனர். ஹஜ் செய்ய நிய்யத் வைத்திருப்பவர்களும் இந்த பைத்துல்மாலில் தங்கள் தொகையை சேமித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத தவணை முதல் ஆறு மாத தவணை வரை தங்கள் தொகையை கடனுதவித் திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பைத்துல் மாலுக்கு கடனாக வழங்குவோர் உள்ளனர். சேமிப்பு திட்டத்தில் இணைவோரிடம் 10 ரூபாயும் கடன் திட்டத்தில் பயனடைய வருவோரிடம் 20 ரூபாயும் பெற்று, அந்தத் தொகையை ஸ்டேஷனரி செலவுக்கும் வசூலகர் சம்பளத்திற்கும் பயன்படுத்தப் படுகிறது. இவைதான் விருதுநகர் பைத்துல்மாலின் பணவரவுக்கான வழிகள். நகை அடமானம் பெற்று அதனை பாதுகாப்பது கடினம் என்பதால் எந்த அடமானங்களும் இல்லாமல் இரண்டு நபர்களின் சாட்சிகளின் அடிப் படையிலேயே கடன் வழங்கப்படுகிறது.
வட்டி வாங்காத சிறுவியாபாரிகள், மருத்துவம், கல்வி மற்றும் வரதட்சணை இல்லாத திருமணம் போன்றவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதிகத் தொகையாக ரூபாய் 5000 வரை கடன் வழங்கப்பட்டு, அதிக பட்சமாக 100 நாட்கள் தவணை தரப்படுகின்றன. கல்வி உதவிக்காக மட்டும் 150 நாட்கள் தவணை தரப்படுகிறது. தின சேமிப்பில் 200 நபர்கள் இணைந்துள்ளனர். அதில் 100 நபர்கள் வீடுகளில் இருந்து செலுத்துபவர்கள். 100 நபர்கள் கடைகளில் இருந்து செலுத்துபவர்கள். இவர்களிடம் தினமும் சென்று வசூலிப்பதற்காக ஒரு வசூலகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாத ஊதியம் பைத்துல்மால் நிர்வாகம் வழங்குகிறது.
சிறுசேமிப்பாளர்கள் தங்கள் தொகைகளை எந்நேரத்தில் திரும்பக் கேட்டாலும் அதனை வீடு தேடிச் சென்று ஒப்படைப்பது மிகப் பெரும் வரவேற்பை பைத்துல்மாலுக்கு பெற்றுத் தந்துள்ளது. பைத்துல்மாலை விருதுநகர் தமுமுக சார்பில் 5 நபர்கள் சேவை மனப்பான்மையுடன் எவ்வித ஊதியமும் இன்றி நிர்வகித்து வருகிறார்கள்.
விருதுநகர் தமுமுக அலுவலகத்தில் ஞாயிறு தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரை பைத்துல்மாலின் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கீழ் பைத்துல்மால் இயங்குவதால் அவ்வப்போது இலவசமாக மருத்துவ உதவிகளும் வழிப்போக்கர்களுக்கான உதவிகளும் செய்த வகையில் இதுவரை ரூபாய் 25000 வரை வராக் கடனாக பைத்துல்மால் செலவிட்டுள்ளது. இதனை நன்கொடைகள் மூலமாகத் தான் நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது.
ஜகாத்தாக வசூலிக்கப்படும் தொகையை அதிகபட்சம் ஒன்றரை மாதத்திற்கும் ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் விநியோகித்துவிட்டு, அதற்கான கணக்குகள் ஜகாத் வழங்கியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தமுமுக மாவட்ட தலைமை அலுவலகம் பர்மா காலனி, விருதுநகர். தகவல்: அப்துல் ரஜாக் 9442056617
“38 வருட சேவையில் தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமியின் வாணியம்பாடி பைத்துல்மால்”
துவக்கம்: 1972, முதலீடு: 6500
வாணியம்பாடி இஸ்லாமிய பைத்துல்மால் ஒரு சிறு வங்கியின் கட்டமைப்பில் இயங்கி வருகிறது. ஐந்து கவுண்டர்களும் பாதுகாப்பு பெட்டக அறையும் நம்மை பிரமிக்க வைத்தது.
1. 1972ஆம் ஆண்டில் இஸ்லாமிய பைத்துல்மால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் 1974ஆம் ஆண்டு Act ofீ 1860 (சொஸைட்டி ஆக்ட்)ன் படி வேலூரில் பதிவு செய்யப்பட்டது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 1972ல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1997ல் மேலும் திருத்தம் செய்யப்பட்டு Income Tax 12கி ன் படி பதிவு செய்யப்பட்டது. இதன் கட்டமைப்பு கீழ் வருமாறு…
ஒரு தலைவர், இரு துணைத் தலைவர்கள்,
ஒரு பொதுச் செயலாளர், இரு துணைச் செயலாளர்கள், ஒரு இன்டர்னல் ஆடிட்டர், 15 நிறுவனர்கள் மற்றும் நிரந்தர உறுப்பினர்கள், அமைப்பாளர் குழுவின் 15 ஊழியர்கள்
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து பொறுப்பாளர்களையும் அமைப்பாளர் குழுவின் 15 ஊழியர்கள் உட்பட பொதுக் குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 150 ஆகும்.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து பொறுப்பாளர்களையும் அமைப்பாளர் குழுவின் 15 ஊழியர்கள் உட்பட பொதுக் குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 150 ஆகும்.
நோக்கம்
நகைகளை வைத்துக் கொண்டு வட்டியில்லாக் கடனை வழங்குவதே பைத்துல்மாலின் ஒரே நோக்கமாகும், தங்கம் வெள்ளி நகைகள் அடமான மூலம் மட்டுமே கடன் கடன் வழங்கப்படுகிறது.
அடமானமாக வரும் நகைகள் அங்கேயே சரிபார்க்கப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. வாணியம்பாடி பகுதியில் குடியிருப்பதற்கான சான்றுகளுடன் அவர்களின் மனுக்கள் உடனே பரிசீலிக்கப்படுகின்றன. நகைத் தொகையில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. மொத்தமாகவோ தவணை முறையிலோ திருப்பித் தரும் சலுகையும் வழங்கப்படுறது. இவ்வாறு தினமும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழரை மணி வரை இயங்கி வரும் பைத்துல்மாலில் 12 நபர்கள் பணியாற்றுகிறார்கள்.
அதில் 5 நபர்கள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் சராசரி 80 நபர்கள் வருகை தருகிறார்கள். மாதம் ரூபாய் சுமார் 12 இலட்சம் வரை பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
2009 – 2010ம் கணக்கு ஆண்டில் மட்டும் ரூபாய் ஒரு கோடியே இருபத்தி ஒன்பது இலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (1,29,64000) பரிவர்த்தனை நடந்துள்ளது. அதில் 1634 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
1973 முதல் 2010 கணக்கு ஆண்டுவரை 72173 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். அதில் ஆறு கோடியே பதினோரு இலட்சத்து நாற்பத்தி எட்டாயிரத்து எண்ணூற்றி எண்பத்து ஏழு (6,11,48,887) ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.
2005ம் ஆண்டு முதல் சிறுதொழில் மேம்பாட்டு மையம் (Small Business development Centre) என்ற பிரிவு துவங்கப்பட்டு 2010 மார்ச் வரை முப்பத்தி இரண்டு இலட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து ஐநூற்றி ஐம்பது (32,73,550) ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது.
சிறு தொழில் வணிகர்களுக்காக கடன் வெறும் 5 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்து, பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், சிறு கடைக்காரர்களுக்கு தினசரி 50 – 100 ரூபாய்களாக 100 நாட்களுக்குள் திரும் பச் செலுத்த வேண்டும் என்ற உறுதிமொழியுடன் 5 ஆயிரம் – 10 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக Guarantor உடன் அவர்கள் 3 வருட அனுபவ முள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும். அதில் 451 சிறு தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
மூன்று மாநிலங்களின் பைத்துல்மால் சேவை அமைப்புகளை இணைத்து Multi State Co – operative Society தேசிய பன்முக கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் முயற்சியை மிகவும் துரிதமாக செய்து கொண்டிருக்கின்றனர். பீஹார், கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் சேவையாற்றிவரும் பைத்துல்மால்களின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனையுடன் இப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பைத்துல்மாலின் பணிகள் விரிவடையவும் அரசின் ஒரே அனுமதியின் கீழ் பல பைத்துல்மால்கள் இயங்கவும் வாய்ப்பாக அமையும்.
ஜகாத் தொகைக்கான தனி கணக்கை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஜகாத் மட்டுமே வரவு செலவு செய்யப்படுகிறது. ஜகாத்திற்கு தகுதியான 8 பிரிவினர்களுக்கு மட்டுமே பங்கீடு செய்யப்படுகிறது. பைத்துல்மால் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் மாதந்தோறும் நடைபெறும். அதில் உதவி கோரும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உதவி பெறத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வெகுதொலைவில் வாழும் மக்கள் அங்கு வருவதற்கு சிரமமாக இருப்பதால் மற்றொரு பகுதியில் கலெக்ஷன் கேபின் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசதி குறைவின் காரணமாக இந்நிறுவனம் இது அமைந்துள்ள இடத்தில் உள்ள மக்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது. சகோதர சமுதாய சகோதரர்களுக்கும் இதன் மூலம் பயன் கிட்டவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
இது தவிர வருடாந்திர ஜகாத், சதகா (ஈகை) குர்பானி தோல் தொகை ஆகியவற்றைக் கொண்டு இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை நோயாளிக ளுக்கு உதவித் தொகை Relief Work போன்ற பணிகள் நடக்கின்றன.
ஜகாத் தொகையிலிருந்து Self Help Group ஏற்படுத்தி, பூ வேலைப்பாடு, ஜரி, தையல், ஊறுகாய், அப்பளம் போன்ற சிறு தொழில்களுக்காகவும் தொகை வழங்கப்படுகிறது. ஜகாத் மற்றும் சதகா நகரிலுள்ள மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.
சொத்து விவரம்
பைத்துல்மாலுக்காக 1978ல் 2000 சதுர அடி இடம் வாங்கப்பட்டு, அலுவலகம் அமைக்கப்பட்டது. இது தவிர நகரின் முக்கிய இடத்தில் 30 கடைகளைக் கொண்ட Shopping Complex உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட 4 லட்சமாகும். இந்த வருமானத்திலிருந்து ஊழி யர்களுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம், இன்ஸ்யூரன்ஸ், வரி மற்றும் பிற செலவுகள் செய்யப்படுகின்றன.
பொது மக்கள் ஆதரவு
இஸ்லாமிய பைத்துல்மால் 1972ல் வெறும் ஆறரை ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்டது. கடன் கொடுக்க அதிகபட்சத் தொகை தேவைப்படுமல்லவா? அதனால் பைத்துல்மால் பொது மக்களின் ஆதரவை வேண்டியது, இவ்வேண்டுகோளுக்கிணங்க ஏறத்தாழ 2500 நபர்கள் மற்றும் நிறுவனத்திற்கு மேலும் தேவையான நிதியினை 3 மாதத்திலிருந்து 3/5 வருடங்கள் வரை கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பைத்துல்மாலின் அனைத்து விதமான நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
பொது மக்கள் உதவியுடன் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பைத்துல்மால் முக்கியப் பங்காற்றி வருவதன் மூலம் மக்களை வட்டி என்னும் சாபத்திலிருந்தும், கொடுமையிலிருந்தும் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. இது நமது சமூக தேவை மட்டுமன்று இஸ்லாத்தின் முக்கிய வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்ற உணர்வும் இப்பணியை இறுகப் பற்றி செயலாற்ற உதவி வருகின்றது.
ரமலான் வசூல், குர்பானித் தோல் மற்றும் இதர நன்கொடைகள் விநியோகிக்க பைத்துல்மால் முறையாக திட்டமிட்டு செயல்படுகிறது. பைத்துல்மாலுக்கு வரும் நிதிகளில் கல்விக்காக 40%மும், மருத்துவ உதவிக்காக 25%மும், திருமணத்திற்காக 25%மும், நிவாரணப் பணிக்காக 10%மும் முறையாய் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மிகுந்த கட்டமைப்புடன் இயங்கி வரும் இவர்கள், பிற பகுதிகளில் இதுபோன்ற பைத்துல்மால்கள் அமைக்க மிகவும் அக்கரையான ஆலோசனைகளை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
915, ஹாஜி அப்துர் ரஹீம் சாஹிப் தெரு, கோட்டை, வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் & 636 751. போன்: 04174-225481, Website: www,ibmvnb.org
- ஹவ்வா மைந்த ன்