இஸ்லாம்பற்றிய ஜப்பானிய பெண்

Largest Mosque in Tokyoசமீபத்தில் நடைபெற்ற வளைகுடா விளையாட்டுப்போட்டிகளுக்கான செய்திகளைத் தொகுப்பதற்காக கத்தர் நாட்டிற்கு வந்திருந்த ஜப்பானின் பிரபல விளையாட்டு செய்திபத்திரிகையாளரான மயோக்கோ என்ற கிறிஸ்துவ பெண் சென்றவாரம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.



"குர்ஆன் கூறும் வாழ்வியல் நெறியே என்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது" என்று கூறும் இவருடன் நடந்த நேர்காணல்:

கேள்வி: இஸ்லாத்தை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?
பதில்: 9/11 தாக்குதலுக்குப்பிறகு இஸ்லாத்தையும் அதன்
வரலாற்றுபின்னணியையும் தெரிந்துகொள்ளும் ஆவல் எனக்குப் பிறந்தது. அதற்கான ஒரு முயற்சியாக, செய்தி ஊடகங்கள் சித்தரிக்கும் "இஸ்லாமிய தீவிரவாதம்" பற்றிய ஆய்வில் இறங்கினேன். இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டி அரபி மொழியைக்கற்றுக்கொண்டேன். திருக்குர்ஆனின் மூலமொழியான அரபியைக்கற்று திருக்குர்ஆனை முழுமையாக படித்துப்பார்த்த எனக்கு பல விஷயங்கள் அதிர்ச்சிகரமான இருந்தது. செய்தித்துறையில் பணியாற்றும் நான், இஸ்லாத்தைப்பற்றி எவ்வாறு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என்பதை அப்போது தான் தெரிந்துகொண்டேன்.
இஸ்லாத்தைப்பற்றி ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இதைச் சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. ஜப்பானியர்கள் இஸ்லாத்தைப்பற்றி அதீத அச்சமும், தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். காரணம், மேற்கத்திய செய்தி ஊடங்கள் இஸ்லாத்தைப்பற்றிய தவறான செய்திகளைத்தான் எங்களுக்கு தந்துகொண்டிருக்கிறன.

இஸ்லாத்தில் உங்களைக்கவர்ந்தது எது?
பல விஷயங்களைச் சொல்ல முடியும். முக்கியமாக சகோதரத்துவம், உறவினர் மற்றும் அண்டை வீட்டார்களைப் பேணும் முறைகள், பணக்காரர்கள், ஏழைகளுக்கு செலவு செய்யும் திட்டங்கள், சத்தியத்தைப்பேணுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நான் திருக்குர் ஆனில் கூறப்பட்ட இக்குணங்களை நேரில் இந்நாட்டு மக்களிடம் செயல்முறையில் கண்கூடாக கண்டதில் எனக்கு பெரும் ஆச்சரியம்.

ஹிஜாப் அணிவது பற்றி கூறுங்களேன்?
ஹிஜாப் அணிவதை நான் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். இதை நான் வாழ்நாள் முழுவதும் என்றென்றும் கடைபிடிப்பேன்.

நீங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உங்கள் நண்பர்கள் யாரேனும் உதவினார்களா?
ஆம்! அஹ்லம் என்கிற கத்தர் நாட்டு பெண்மணி இஸ்லாத்தைப்பற்றி பல்வேறு தகவல்களைத் தந்து எனக்கு ஆர்வமூட்டினார். தூய இந்த மார்க்கத்தை ஆழமாக அறியச்செய்த அவருக்கு, நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் இஸ்லாத்தை தழுவிய விஷயம் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா?
இதுவரை தெரியாது.

ஜப்பானுக்கு திரும்பிச்செல்லும் நோக்கம் உள்ளதா?
இல்லை. எனக்கு இங்குள்ள இஸ்லாமிய சூழல் மிகவும் பிடித்துள்ளது. எனவே, இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்.

உங்கள் திருமண ஏற்பாடுகள் பற்றி?
இறைவன் நாட்டத்தினால், கண்டிப்பாக நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொள்வேன். அவர் என்னை புரிந்து நடப்பவராகவும் விளையாட்டில் ஆர்வமுள்ளவராகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen