கள்ள காதல்....இஸ்லாமிய தீர்வு


இன்று நாம் வாழ கூடிய இந்த உலகில் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் நாம் செய்தித்தாள் மற்றும் ஊடகம் மூலமாக தெரிந்து கொண்டு வருகிறோம். ஒரு செய்தி ஒருநாள் வந்தாலும் மறுநாள் வருவது இல்லை. ஆனால் தினம் தினம் செய்தித்தாள் மூலமாகவும் ஊடகம் மூலமாகவும் வரும் செய்தி ஒன்றுதான். அந்த  செய்திதான் கள்ளகாதல். மனைவியே வெட்டி கொன்ற கணவன் . தாயே வெட்டி கொன்ற மகன் . சகோதரியே வெட்டி கொன்ற சகோதரன் என்று இன்றைய செய்திதாள்களில்முக்கிய பங்கு வகித்து வருகிறது.  இந்த மாதிரியான தீமைக்கு விடை தெரியாமல் இருக்கிறார்கள் பல சமுக ஆர்வலர்கள். இந்த தீமை நடைபெற காரணம்  இரண்டு . ஒன்று அந்த பெண்ணுக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைப்பது , மற்றொன்று  கணவன் அந்த பெண்ணை உபசரிக்கும் முறை. ஆனால் இந்த தீமைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே இஸ்லாம் தீர்வை தந்து விட்டது. எப்படி என்றால் இஸ்லாம் ,பெண்ணை கண்ணியப்படுத்தியதிலும் ,சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது. 'ஒரு பெண்தான் கணவரை தேர்ந்துதெடுக்க முழு உரிமை பெற்றவள்' என்று கூறியிருப்பதே !தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் இருப்பத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்த பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமத்திக்க வில்லை. சில  சமயங்களில் அவளுக்கு பிடிக்காத ஒருவனை  மணமுடித்து வைக்க, தகப்பன் நிர்பந்திக்க கூடும் .அந்த நிலையிலும் .பெண்ணாகிய அவளிடம் தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு .என்பதற்கு பல மார்க்க ஆதாரம் உண்டு .

கன்ஸா பின்த் கிதம் (ரலி ) அறிவிக்கும் ஹதிஸ்
என்னை யானது தந்தை தன சகோதரரின் மகனுக்கு திருமணம் முடித்து வைத்தார் . ஆனால் நான் அந்த திருமணத்தை விரும்பவில்லை .எனக்கு அந்த திருமணத்தில் வெறுப்பாகவே இருந்தது .இதை பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன் . அதற்க்கு அவர்கள் நீ செல்லலாம்,இந்த திருமணம் ஆகுமான திருமணம் அல்ல ;இது செல்லாது ஆகவே நீ விரும்பியவரை மணம்முடித்து கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது என்று நபி(ஸல்) கூறினார்கள் .

ஆகவே பெண்கள் விரும்பும் நபர்களை திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்குள் அன்பும் ,அரவணைப்பும் இருக்கும் .

ஏனென்றால் அல்லா திருமறை குரானில் கூறும்போது

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை
உங்களில் இருந்தே அவன் உற்பத்தி செய்து,உங்களுக்கிடையில் அன்பையும்,நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும் . சிந்தித்து உணரக்கூடிய  மக்களுக்கு இவற்றில் ஒன்றல்ல நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல்:குரான்-30 :21 

இந்த வசனம் என்ன கூறுகிறது என்று கவனித்தல்   சிந்தித்து உணரக்கூடிய  மக்களுக்கு இவற்றில் ஒன்றல்ல நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. என்று கூறுகிறது.
பெண்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து வைப்பதால் அவர்களுக்கு இடையே அன்பும்,நேசமும் இருக்கும். பெண் விரும்பாத நபரை திருமணம் செய்து வைப்பதால்  திருமணத்திற்கு முன்பாக அவள் விரும்பிய நபரோடு தொடர்பு இருப்பதால் தான் கள்ள உறவுகள் எற்படுகிறது . குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு மனைவியின் நாடத்தை பிடிக்காமல் மனைவேயே கலை செய்து விடுகிறார்கள் .

ஆகவே இஸ்லாம் கூறும் பெண் விரும்பும் நபரை திருமணம் செய்து வைத்தால் கள்ள உறவுகளை நிச்சயமாக தடுக்கலாம்.

இரண்டாவதாக மனையியுடன் கணவன் நடந்து கொள்ளும் முறை முலமாகவோம் இந்த கள்ள உறவுகளை தடுக்கலாம் .

இதற்கும் இஸ்லாம் விடை தந்துவிட்டது .

திருமணம் செய்து மனைவியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கட்டளையிடுகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் :
"பெண் விழா எலும்பை போன்றவள் .அவளை நீ நிமிர்த்தினால், ஒடிந்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் ,அவளிடம் குறையுள்ள நிலையே இன்பத்தை அடைந்து கொள்வாய்.!அவளை நீ நேராக்க முயன்றால் ஒடிந்து விடுவாய்.அவளை ஒடிப்பது என்பது அவளை தலாக் விடுவதாகும்.
நூல்;முஸ்லிம்
மனைவியின் சில குணங்கள் தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக.தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது ,'விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்க கூடாது.அவற்றை நேராக்கியே தீருவேன்'என்று நினைப்பது போலாகும் .

அப்படி நினைப்பது செயல்பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும் .அதனால் கணவன் மேல் வெறுப்பு எற்பட்டு விடும் .இதனால் தன் கணவனுக்கு துரோகம் செய்யும் அளவிற்கு அந்த பெண்  தள்ளபடுகிறாள் .
அல்லாஹ் கூறுகிறான் :
                  அவர்களுடன் (மனைவிகளுடன் )சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்!அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் சரியே! ஏனென்றால்,நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்து இருக்கலாம் .அல் குரான் :4 :19

அடுத்ததாக வேலை வேலை என்று கணவன் மனைவியின் ஆசையில்  பங்கு பெறாமல் இருப்பதால் அவளுக்கு வேறுவிதமாக சிந்தனை வருவதால் அவள் தவறான முடிவிற்கு சென்றுவிடுகிறாள்.

ஆனால் இவ்வாறு இருக்க கூடாது   என இஸ்லாம் கணவனுக்கு  கட்டளையிடுகிறது.

உஸ்மான் இப்னு மல்வூனின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் (ரலி)  நபி(ஸல்) அவர்களின் மனைவியரிடம் அலங்கோலமான ஆடையுடன் ,"உனக்கு என்ன நேர்ந்தது?யன் இந்த கோலத்தில் இருக்கிறாய் என்று கேட்டார்கள் . கவ்லா (ரலி)தனது கணவரை பற்றி :அவர் இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகல் நேரங்களில்  நோன்பு வைக்கிறார்" என்று  கூறினார்கள். நபி(ஸல்)அவர்களிடம் இதை பற்றி கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு மல்வூனை கண்டுத்தார்கள். "என்னிடத்தில் உனக்கு முன்மாதிரி இல்லையா ?என்றார்கள். அவர் ஆம் இருக்கிறது. அதற்க்கு பிறகு கவ்லா (ரலி) மனம் பூசி அலங்காரமாக வந்தார்கள்.

       இதில் இருந்து தெரிவது மனைவியுடன் உடலுறவு கொள்வது முக்கியத்துவத்தை பற்றி :

அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் மனைவிகள் உங்களுக்குரிய விளைநிலம். உங்கள் விளைநிலத்தில் நீங்கள் விரும்பியவாறு சென்றுஉங்களுக்கு முற்படுத்திக்தி கொள்ளுங்கள். 
அல்பகறா அத்தியாயம் 2 வசனம் 223

ஆகவே மனைவியிடம்  அன்பாக நடந்தால் இந்த மாதிரியான மானக்கேடான(கள்ள தொடர்பு ) செயலில் இருந்து விலகி இருப்பார்கள் பெண்கள்.
 அப்படிபட்ட பெண்களாக நம்பிக்கை கொண்ட  பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக.
பெண்களுக்கு ஒரு உபதேசம்

''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
''விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்

வருமானத்தை அறுத்துவிடும்

ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்

நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

நபி(ஸல்)கூறினார்கள்:"ஒருவர் தன் மனைவியே படுக்கைக்கு அழைத்தல் ,அந்த மனைவி அவரிடம் சல்லட்டும்"அவள் அடுப்பிலே சமித்துகொண்டு இருந்தாலும் சரியே " நூல் :திர்மிதி

இன்ன பெண்ணை அல்லாஹ் சபிப்பானாக !அவள் யார் என்றால்,கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது 'அப்புறம்,அப்புறம், அப்புறம், என்ரபடியே  தள்ளிபோடுகிறாள்.பின் கணவரும் தூங்கி விடுகிறார் . என நபி(ஸல்)கூறினார்கள்.

இஸ்லாமிய சகோதரர்களுக்கு :
                     "நம்பிக்கையாளர்களே ! நீங்கள் உங்களை உங்கள் குடும்பத்தினரை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.அதனுடைய எரிகட்டை மனிதர்களும்,கற்களுமாகும்.அதில் கடின குணமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர்.அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு மாறு செய்யமாட்டார்கள்.
அவர்கள் வேதனை செய்யுமாறு தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளை செய்து வருவார்கள். அல்குரான் -66 :6 
நெல்லை இனியவன்(அலாவுதீன்)
9789070505 
www .vaikarainews .com
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen