இஸ்லாம் ஓர் அழகிய சுவனப்பாதை

தேசத் தந்தை மஹாத்மா காந்தி
இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான

தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்

 
ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான்.  குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) பற்றி காந்தியடிகளின் கருத்து

அம்மஹானின் சிறிதும் பிசகாத ஆடம்பரமற்ற வாழ்க்கையும் தான் என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும் கொடுத்த வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும் நண்பர்களிடத்தும் தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும் அசாமையும் கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும் தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)


அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?




பண்டித ஜவஹர்லால் நேரு

அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தைப் பரப்பபும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.

இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே! இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.

இத்தகைய வெற்றிக்குக் காரணம் முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதிஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)



இலக்கியத்திற்காக நேபால் பரிசு பெற்ற ரபீந்திரநாத் தாகூர்
முசல்மான்களை ஒன்றாக இணைப்பது அவர்களுக்குத் தர்மத்திலுள்ள பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பபு அல்ல. அனாவசியமான கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுத்தியிருக்கிறது.  ஒரு கொள்கையைப் பல அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் தர்ம உணர்வு. (புத்தகம்-கோரா நாவல்)

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய Dr. அம்பேத்கார்.
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. -


தந்தை பெரியார்
இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.


சர்வபள்ளி டாக்டர் ராதா கிருஷ்ணன்.
பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கை மதம். (மார்க்கம்)


அறிஞர் அண்ணா
 
முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது.ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை

கவிக்குயில் சரோஜினி நாயுடு
சகோதரத்துவப் பாடத்தை சுதந்திர உணர்வை சமத்துவப் பண்பாட்டைப் போதித்து இவ்வவுலகைப் பொலிவுறச் செய்த பெருமைக்குரிய அண்ணல் நபியின் திருப்பெயர் உலகம் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை நாட்டிற்று என்னும் ஒரே அம்சத்தில்தான் இம்மதம் ஏனைய மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனக் கூறுகிறேன்.

உலகம் இன்று எதை வேண்டி நிற்கிறது? உலக மக்களின் தற்போதைய வேண்டுதல் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு சமூக அமைப்பைப் படைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த உயர்நிலை இலட்சியத்தை தேவையைப் பாலைவனத்தின் தீர்க்கதரிசி ஒட்டகமோட்டி (அண்ணல் நபி) பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே உபதேசித்து அருளினார். (கட்டுரைத் தொகுப்புகள்)
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen